இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 53 மில்லியன் அமெ. டொலர் செலுத்தப்படவுள்ளது – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

Monday, January 24th, 2022

கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் 53 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 37,500 மெட்ரிக் தொன் டீசலைப் பெறுவதற்காக இந்தக் கொடுப்பனவு செலுத்தப்படவுள்ளது.

இதன்படி, நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும், இதனூடாக தடையற்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மின்வெட்டை அமுல்படுத்த போவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: