இரணைமடு குள அபிவிருத்தி பணியிலீடுபட்டிருந்த பொறியியலாளர் பரிதாப பலி!
Tuesday, October 4th, 2016
இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
இரண்டு மாதங்களில் தேங்காய் விலை குறையும்!
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
இரண்டு மாதங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் - இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் த...
|
|
|


