இன்றுமுதல் மீண்டும் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை ஆரம்பம் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 22nd, 2020

இன்றுமுதல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

ஆத்துடன் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதற்கிணங்க தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

10 அலுவலக நாட்களுக்குள், வருகை தர சாதகமான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் அந்த தினத்தில் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும்’ தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: