இன்னொரு குப்பைமேடும் சரிந்து விழும் அபாயம் – எச்சரிக்கிறார் புவியியல் பேராசிரியர்!

Monday, April 24th, 2017

கொஹாகொட குப்பை மேடும் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரிக்கை செய்துள்ளார்.

நீண்டகாலமாக கண்டி நகர பிரதேச குப்பைகள் கொஹாகொடையில் கொட்டப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 100 தொன் வரையிலான குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. ஒரு மலையடிவாரப் பகுதியில் இந்த குப்பை மேடு அமைந்துள்ளது.

எவ்வேளையிலும் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார். இக்குப்பை மேடு சரிந்து விழும் பட்சத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன் அருகிலுள்ள சிற்றோடைகளிலும் கலந்துவிடக்கூடும். இவ்வோடைகள் மகாவலிகங்கையில் சங்கமமாகி மகாவலி கங்கைக்கும் மாசு ஏற்படுத்தலாம். எனவே இக் குப்பைமேடு குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்

Related posts: