இன்னும் இரு ஆண்டிற்குள் சகல நிறுவனங்களும் சூரிய சக்தியால் வலுவூட்டல் செய்யப்படும் -நிதியமைச்சர்

வரும் இரு ஆண்டுக்குள் நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களையும் முழுமையாக சூரிய சக்தியால் வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தியின் மூலம் வலுவூட்டும் தேசிய திட்டத்தின் முதல் கட்டத்தை நிதியமைச்சர் நேற்று நிதியமைச்சில் ஆரம்பித்து வைத்தபோது இவ்வாறு கூறினார்.
இரண்டு வருடங்களுக்குள் சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தி வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மின்வலு தோற்றுவாய்களுக்கு நிலைமாறும் துரித அபிவிருத்திப் பயணத்தில் இது முக்கியமான மைல்கல் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
புதிய மின்வலு உற்பத்தி தொகுதியின் மூலம் நிதியமைச்சின் மாதாந்த மின்சாரக் கட்டணம் இரண்டு இலட்சம் ரூபாவால் குறையக்கூடுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
Related posts:
மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு இடமளிக்க மாட்டேன்
வெளிநாட்டு தொழில் வெற்றிடத்துக்கு அனுமதியளிக்கும் காலம் 2 மணித்தியாலங்களாக குறைப்பு - இராஜாங்க அமைச...
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !
|
|