இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் ‘தெய்வீக கிராமம்’ நிகழ்வு!

Sunday, October 4th, 2020

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தெய்வீக கிராமம்’ நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வு, மன்னார், ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழம காலை இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவசிறி இராமச் சந்திரக் குருக்கள் பாபுசர்மா கலந்து கொண்டார்.

இதன்போது, ஆண்டாங்குளம் சிறி நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் இருந்து மண்டபம் வரை இந்து எழுச்சி ஊர்வலம் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகள், சிறப்பு உரைகள் நடைபெற்றன.

குறித்த நிகழ்வில் கிராம மக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், அறநெறி பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: