இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!
Thursday, February 2nd, 2017
இந்திய மீனவர்கள் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர். இவர்களை யாழ் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தமிழக பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் 2 படகுகளில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது, காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் என்பன கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 10 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts:
வடக்கு - கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
மதுபோதை சாரத்தியம்: 1763 சாரதிகள் கைது!
வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க யோசனை - தலைமை தொற்று நோயியல்...
|
|
|


