இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது!
Monday, May 30th, 2016
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்நாட்டிலே தயாரான தேஜஸ் விமானம் செப்டெம்பர் மாதத்தில் இராணுவத்தில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் வெளிப்படையாக நடைபெற்று, அதன் மூலம் அரசுக்கு ஒரு இலட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!
அரசியலமைப்புக்கு முரணாக எவ்வித தீர்வும் வழங்கப்படாது - அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!
ஜூனில் 27 ஆயிரத்து 937 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக...
|
|
|


