இந்தியா 22 அம்புலன்ஸ்கள் அன்பளிப்பு!

Friday, September 30th, 2016

இந்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “சுவசெரிய” அம்புலன்ஸ் சேவைகள் மூலம் 22 அம்புலன்ஸ்கள் கொழும்பு மாவட்டத்துக்கு நேற்று (28) திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுத்தப்படும் இந்த அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு எந்த தொலைபேசி வலையமைப்பினூடாகவும் தொடர்பு கொள்வதன் மூலம் இலவசமாக பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் இச் சேவையின் பிரதான செயலகம் ராஜகிரிய தேர்தல் செயலாளர் காரியாலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

குறிப்பிட்ட முழுமையான வசதிகள் கொண்ட இவ் அம்புலன்ஸ் வண்டிகள் கொழும்பு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் ஒரு வண்டி வீதம் வழங்கப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இவ் அம்புலன்ஸ் சேவை இதுவரை ஹம்பந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் நடைமுறையிலுள்ளது.

88 அம்புலன்ஸ்கள் அந்நகர பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.

இந்த அம்புலன்ஸ்களை இயக்க தற்போதுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தையே பயன்படுத்துகின்றோம்.அதன் மூலம் வாகன வேகத்தையும் கட்டுப்படுத்த முடியும். எதிர்காலத்தில் 119 தொலைபேசி அழைப்பின் மூலம் இச் சேவையை பெற வசதிகள் செய்து கொடுக்கப்படும். இச்சேவை மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படமாட்டாது.

அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் நிறுவப்படவுள்ள அம்புலன்ஸ் சேவைக்கு பொலிஸாரின் ஒத்துழைப்பை வழங்கவுள்ளோம்.ஒரு அம்புலன்ஸ் வண்டியில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் வைத்தியர் ஒருவரும் சம்பவ இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாம் எப்போது இந்தியாவுக்கு ஏசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றி கூறவேண்டும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால வரவேற்புரை நிகழ்த்தியதோடு நன்றியுரையை கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர நிகழ்த்தினார்.பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

930311col213159890_4819526_28092016_kll_cmy

Related posts: