இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு விடுதலை!
Monday, January 9th, 2017
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுப்பட்ட மூன்று இலங்கையர்களை விடுதலை செய்யுமாறு தமிழ்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கையர்கள் மூவரையே இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தனர். இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி குறித்த மூவரையும் இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வடக்கில் அனைத்து சந்தைகளின் வியாபார நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் - வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தட...
முல்லைத்தீவில் கடும் வறட்சி - இராணுவத்தினரால் மக்களுக்கு குடிநீர் விநியோகம்!
புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப...
|
|
|


