இணுவில் காரைக்கால் அம்மன் ஆலய புனரமைப்பிற்கு உதவுமாறு ஈ.பி.டி.பி.யிடம் கோரிக்கை!
Monday, March 21st, 2016
இணுவில் காரைக்கால் அம்மன் ஆலய நிர்வாகசபையினர் தமது ஆலயத்தை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆலய புனரமைப்பு தொடர்பான கூட்டம் ஆலய மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிதியாக கலந்துகொண்ட நல்லூர் பகுதி இணைப்பாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப் பட்டது.
ஆலய நிர்வாகத்தினரது கோரிக்கைக்கு பதிலளித்த இரவீந்திரதாசன். குறித்த கோரிக்கையை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்
Related posts:
காற்று மாசடைவதால் வருடாந்தம் சுமார் 70 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்!
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு - குடிவரவு மற்றும் க...
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் கா...
|
|
|


