இணக்கசபைக்கு சென்றது சுசந்திகாவின் வழக்கு!
Thursday, October 20th, 2016
இலங்கையின் ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க மீது அவரது கணவர் தாக்குதல் மேற்கொண்டார் எனத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கை இணக்கசபைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்ல்பான வழக்கு இன்று கம்பஹா பிரதான நீதவான் காவிந்தா நாணயக்கார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சுசந்திகா மீது அவரது கணவர் தாக்குதல் மேற்கொண்டார் எனத் தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் அவரது கணவர் மீது பொலிஸில் முறைப்பாடொன்றை செய்திருந்தார்.
இதன்பிரகாரம், அவரது கணவர் தம்மிக நந்தகுமார பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!
சிறுபோக நெற்செய்கைக்கான செயற்றிட்டங்கள் தயாரிப்பு!
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மே 08 முதல் ஆரம்பம்!
|
|
|


