இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உயர்வாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிகமாக வீசும் கடும் காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மீட்டர் கருவி விவகாரம்: முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை!
நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் - அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சர...
நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்...
|
|