இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக யாழ்ப்பாணம் வருகை!

Wednesday, February 7th, 2024

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றையதினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09 ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட  பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் நேற்று  யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: