ஆவா குழுவை இயக்குவது சுவிஸர்லாந்திலுள்ள தமிழ் அமைப்பு!
Monday, December 4th, 2017
ஆவா குழுவுக்கு நிதியுதவி மற்றும் அறிவுரை கிடைக்கப் பெறுவது, சுவிஸர்லாந்தில் இருக்கும் தமிழ் அமைப்பு ஒன்றின் மூலம் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள ஆவா குழு தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிஸர்லாந்திலுள்ள குறித்த குழுவினர், இப்போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், அக் குழுவில் இருக்கும் இருவர் தற்போது இலங்கைக்கு வந்திருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
Related posts:
சிவனொளிபாத மலையில் 200ற்கும்அதிகமானோர் வழிதவறியுள்ளனர்.
ஏரியில் வீசப்பட்ட குழந்தை : தாயானார் பெண் பொலிஸ் அதிகாரி!
தொழில் வாய்ப்புகளை வழங்க அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
|
|
|


