ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது!
Tuesday, August 15th, 2017
ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தருசன் (வயது 21) என்ற இளைஞரே இன்று செவ்வாய்க்கிழமை காலை (15.08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இளைஞரின் முகநூலில் ஆவா குழுவிவைச் சேர்ந்த நபர்களுடன் எடுக்கப்பட்ட குறூப் புகைப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்தே இளைஞரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞரை நேற்றையதினம் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
கொரிய பரீட்சைகு விண்ணப்பம் கோரல்!
கோர விபத்து - பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயம்!
2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதாரண த பரீட்சையில் தோல்விகள் ஏற்படாது - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜய...
|
|
|
மாணவர்களுக்கு புதிய பாடவிதானம் - சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்...
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்த திட்டம் - பரீட்சைகள் ஆ...
அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் - அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை...


