ஆவாக் குழு பயன்படுத்திய மோட்டார்ச் சைக்கிள் மீட்பு!

ஆவாக் குழு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார்ச் சைக்கிளொன்று யாழ். கொக்குவில் பிரதேசத்தில் பாழடைந்த தோட்டமொன்றிலிருந்து அநாதரவாக மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாம் படையணியொன்று குறித்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளது.
உரிமையாளரில்லாத் மோட்டார்ச் சைக்கிளொன்று கொக்குவில் பிரதேசத்தில் தோட்டமொன்றில் காணப்படுவதாக அதிரடிப்படையின், புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே இந்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் குற்றச் செயல்களுக்காக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி விட்டு பின்னர் குறித்த தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறி!
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை யாழ்.மாவட்டத்தில் அதிகரிப்பு - 742 பேர் சிகிச்சைக்குள்ளா...
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தீவிரமாக செயல்படுவேன் - மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவி...
|
|