ஆழ்கடல் பாதுகாப்பில் இலங்கை கடற்படை!
Sunday, April 17th, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திட்டம் ஒன்றை அடிப்படையில் மாலைதீவு முதல் மலாக்கா நீரிணை வரையான ஆழ்கடலில் இலங்கை கடற்படை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், மாலைதீவு மற்றும் இந்தோனேசியாவில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்றும் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது இலங்கை கடற்படைக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்கள் தேவைப்படுகின்றன என்றும், விரைவில் நான்கு கப்பல்களை இதற்காக கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தப் பாதுகாப்புத் திட்டம் 2020ஆம் ஆண்டு வரை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தினமும் குடித்துத் தர்க்கிக்கும் அந்தணருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!
போராட்டக்காரர்கள் தங்கியுள்ள அலரி மாளிகைக்குள் மோதல் - பலர் காயம்!
நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதால் டிசம்பர் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் அவசியம் ஏற்படாது - பொது...
|
|
|


