ஆளுநர் ரெஜினோல்ட் குரே – இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு!
Wednesday, April 4th, 2018
புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று முந்தினம் மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதுவரை காலமும் பதவிவகித்த ஆ.நடராஜன் அவர்கள் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய யாழ் இந்திய துணைத் தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வளிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
காலாவதியான பொருள்கள்: வர்தகருக்கு தண்டம்!
20 ஆவது திருத்தத்தில் பிரதமரின் அதிகாரங்கள் குறையாது – உறுதிபடத் தெரிவிக்கின்றார் பிரதமர்!
அம்பாறை - மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


