ஆறு.திருமுருகன் அவுஸ்திரேலியா பயணம்!
Friday, April 21st, 2017
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளார்.
நாளை -22 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி அபயகரம் அறக்கட்டளையின் வெள்ளிவிழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் பொருட்டே அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
மேலும் மறைமலையடிகள் நினைவுப்பேருரை வைபவம் மற்றும் உலக சைவப்பேரவை நடாத்தும் சான்றோர் விழா போன்ற விழாக்களில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் சைவத்தமிழ்ப்பணி தொடர்பாகவும் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் சிட்னி சைவமன்றத்தின் ஏற்பாட்டில் சிட்னி முருகன் ஆலயத்தில் இரு தினங்கள் சிறப்புரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிவிவகார தொடர்புகளை வலுப்படுத்த இலங்கை - ரஷ்ய பேச்சுவார்த்தை!
புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர...
5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை - விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தி...
|
|
|


