ஆயுர்வேத முறையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை!

ஆயுர்வேத முறைமூலம் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்கீழ் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் பாதிப்புக்கான காரணத்தையும் கண்டறிவதற்காக மதவாச்சியில் ஆய்வு வைத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித சேனரட்னவின் தலைமையில் இந்த வைத்தியசாலை பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. ஆயுர்வேத வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக தற்பொழுது இரண்டாயிரத்து 480 நோயாளிகள் இங்கு பதிவு செய்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
வவுனியா பேருந்து நிலையத்தில் ஆணின் சடலம் மீட்பு
அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவுக்கு உத்தேச நிதி வரைபு நாடாளுமன்றில்!
செய்தி வழங்கும் அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த சிவஞானம்!
|
|