ஆயிரத்து 994 முப்படை வீரர்கள் கைது!
Tuesday, March 21st, 2017
பொது மன்னிப்பு காலத்தில் முப்படையில் சரணடையாத 41 ஆயிரம் உறுப்பினர்களில் ஆயிரத்து 994 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஆயிரத்து 570 பேர் இராணுவ வீரர்கள் என்பதுடன், அதில் 3 பேர் இராணுவ அதிகாரிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் 393 பேர் கடற்படை வீரர்களுடன், 31 பேர் விமானப் படை வீரர்கள் எனவும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 6 மாதத்திற்கு மேலாக இராணுவ சேவையை கைவிட்டு சென்றுள்ள நிலையில், சேவையை கைவிட்டு சென்றமையை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சி.ஐ.டியினரே சுவிஸ் குமாரை அழைத்து சென்றனர்- தாய் தெரிவிப்பு!
அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி கிடைக்குமா - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு ஆராய்வு....
|
|
|


