ஆசிரிய ஆலோசகர் சங்க விசேட பொதுக்கூட்டம்
 Friday, March 11th, 2016
        
                    Friday, March 11th, 2016
            வட மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கப் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை (12) காலை 9 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகக்குழுவினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களின் நிலை குறித்து கலந்துரையாடுவதுடன் வடமாகாணத்தில் தற்போது கடமையில் உள்ள ஆசிரிய ஆலோசகர்களது விபரங்களையும் திரட்டிச்செல்லவுள்ளனர்.
எனவே, வட மாகாணத்திலுள்ள பன்னிரெண்டு கல்வி வலயங்களிலும் கடமையாற்றும் அனைத்து ஆசிரிய ஆலோசகர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
தெளிவாக தெரியும் உலக முடிவிடம்!
சீனாவில் உள்ள "வெள்ளை குதிரை” விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்...
யாழ் - சிறைச்சாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் மண்டபம் சிறைச்சாலை ஆணையாளரால் திறந்துவைப்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        