ஆங்கில பாடம் தொடர்பான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று ஆரம்பபம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Friday, May 10th, 2024
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வுகள் 10,11, 13 மற்றும் 20ஆம் திகதிகளில் பத்தரமுல்லையில் உள்ள பொருளாதார கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளன.
இந்த ஆட்சேர்ப்புகள் டிசம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் முடிவுகளின்படி செய்யப்படுகின்றன மற்றும்
தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.govlk இல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
20 கட்சிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!
ஊடகங்களை மேற்பார்வையிட சுயாதீன ஆணைக்குழு - ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க!
வடக்கில் அவசரகால நிலைமை ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயார் - ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்ம...
|
|
|


