அவுஸ்திரேலிய வீசா முறையில் மாற்றம்!

Sunday, November 20th, 2016

அவுஸ்திரேலியாவில் வேலை பார்க்க வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ‘457 வீசா’ முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன்  புதிய வேலை தேடுவதற்காக வழங்கப்படும் கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றறது.

அவுஸ்திரேலியாவில், இந்தியா, சீனா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்களுக்கு வழங்கப்படும் ‘457 வீசா’ முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒருவர் பார்த்து வந்த வேலைக்கான ஒப்பந்த காலம் முடிந்த பின், அவுஸ்திரேலியாவில் இருந்தபடியே புதிய வேலை தேடுவதற்காக 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது இது, 60 நாட்களாக குறைக்கப்பட்டது.

இந்த கால அவகாசம், கடந்த 2013ல் 28 நாட்களில் இருந்து 90 நாட்களாக உயர்த்தப்பட்டது.தற்போது மீண்டும் குறைக்கப்பட்டிருப்பது வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறுகையில்,நவ. 19 முதல், ‘457 வீசா’ முறையில் புதிய வேலை தேடுவதற்காக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும்.இதன்மூலம் நேர்முகத்தேர்வில் அவுஸ்திரேலியர்களுக்கும், வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே போட்டி குறையும். நிறைய அவுஸ்திரேலிய இளைஞர்களுக்கு சொந்த நாட்டிலேயே வேலை கிடைக்கும் என்றார்.

28-visa23324-600-jpg

Related posts: