அழகியற்கலை பல்கலைக்கு புதிய உபவேந்தர் !

Thursday, November 24th, 2016

இலங்கை அழகியற்கலை பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, சங்கீத வித்துவான் எஸ்.எம். சனத் நந்தசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் அவர் பெற்றுக்கொண்டார்.இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் மற்றும் சனத் நந்தசிறியின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப், பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

president-3

Related posts: