அலுவலர் பற்றாக்குறையால் ஓய்வுபெற்றோருக்கு ஓய்வூதிய விளக்கம் தாமதம்!
Thursday, May 10th, 2018
சேவையிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விவரங்கள் இன்னமும் தாம் கடமையாற்றிய அலுவலகத்தால் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு அனுப்பப்படவில்லை என்று ஓய்வு பெற்றவர்கள் கவலை தெரிவித்தனர். ஓய்வூதியம் செய்து அனுப்புவதற்கு அலுவலர் இல்லாததால் விபரங்கள் அனுப்ப முடியவில்லையென அலுவலகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அரச பணியாளர் ஒருவர் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் உரிய படிவங்கள் அனுப்பப்பட்டு ஓய்வூதியத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்த பின்னரே ஓய்வூதியம் பெற முடியும். இந்த நிலையில் உரிய விபரங்கள் அனுப்பப்படாததால் தாம் ஓய்வு பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும் விவரங்கள் திணைக்களத்துக்கு அனுப்பப்படவில்லையென்று ஓய்வு பெற்ற பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அலுவலக பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டபோது ஓய்வு பெறுபவர்களின் விவரங்கள் திணைக்களத்துக்கு அனுப்புவதற்கு அலுவலகத்தில் ஓய்வூதியப் படிவங்கள் தயாரிக்கக்கூடிய அலுவலர் இல்லை. அதனால் இன்னமும் அனுப்பவில்லை. வேறு அலுவலகங்களில் உள்ள அனுபவமுள்ளவர்களின் உதவியுடன் விபரங்களை அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.
சேவையிலிருந்து பணியாளர் ஓய்வு பெறும் மாதத்தின் அடுத்த மாதம் தொடக்கம் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டுமென்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அலுவலகத்தில் மாதக்கணக்கில் உரிய படிவங்கள் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு அனுப்பப்படவில்லை என்று ஓய்வூதியர்கள் கவலை தெரிவித்தனர்
Related posts:
|
|
|


