அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு!

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அறநெறிப் பாடசாலைகளுக்கான நூலக கொடுப்பனவையும் அறநெறி ஊக்குவிப்பு கொடுப்பனவையும் ஒன்றிணைத்து வழங்குவதற்காக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பிதிருந்த ஆவணத்தி;ற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்கமைய, புத்தசாசன அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அனுமதி கிடைத்திருப்பதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அவச...
காலநிலையில் மாற்றம் - மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழ...
|
|