அரிசி, உருளைக் கிழங்கு மீதான வரிச்சலுகை நீடிப்பு!

Tuesday, April 3rd, 2018

அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகையை ஒரு மாதத்தால் நீடிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இம்மாதம் இறுதி வரை அரிசிக்கான வரிச்சலுகை அமுலில் இருக்கும் என அக்குழு தெரிவித்துள்ளது.

பண்டிகைக்காலத்தில் அரிசிக்கான விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக வரியைமேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிப்பதற்கும் வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது.

ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்ட 30 ரூபா வர்த்தக வரி இன்றுடன் நீக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும், விவசாயிகளின் நலன் கருதி மேலும் 2மாதங்களுக்கு அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவுக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், உருளைக்கிழங்கு மீதான வர்த்தக வரி எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு - இரத்த தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுமக்களிடம் ...
கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த விருதுகள் இடைநிறுத்தம் - யாழ்ப்பாண பல்கலை துணை...
ஊழியர் நிதியத்தில் வரி அறவிடும் யோசனை பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டது – அமைச்சர் நிமல் சிறிபா...