அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயம் – நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த மாற்றம்!

அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாவாகவும் அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - இளஞ்செழியன்!
மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் 390 போர் கைது!
|
|