அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை இரத்து செய்து வெளியானது வர்த்தமானி !

Thursday, September 30th, 2021

அரிசிக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை விதித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்து, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அரிசி உற்பத்தியாளர் ஒருவர் ஆலை உரிமையாளருக்கு அரிசியை விற்பனை செய்யவேண்டிய அதிகபட்ச விலையை நிர்ணயித்து கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுவதாக புதிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு கிலோகிராம் கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 125 ரூபாவாகவும் சம்பா அரிசியின் விலை 103 ரூபாவாகவும் நாட்டரிசியின் விலை 98 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், கடந்த அமைச்சரவையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று முன்தினம் (28) பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து அரிசி விற்பனைக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் நாட்டரிசி 115 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 140 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 165 ரூபா எனவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை - பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு!
மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூட...
ஜனாதிபதி மாளிகையில் இருந்த 17.5 மில்லியன் வந்தது எப்படி? - கோட்டாபயவின் சட்டத்தரணி வாக்குமூலம்!