அரச வைத்தியர்களின் போராட்டம் ஆரம்பம்!

நாடளாவியரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று (30) காலை 8 மணி முதல் 24 மணிநேரத்திற்கு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
Related posts:
வட, கிழக்கில் முதலீடு செய்ய சீன அரச நிறுவனம் இணக்கம்!
சகோதரனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற சிறுவன் - சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்திட...
பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் விலை மோசடி – நுகர்வோர் கடும் விசனம்!
|
|