அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை வழங்கும் அரச மருத்துவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்பதலளித்துள்ளது.
அதனடிப்படையில் குறித்த கொடுப்பனவுகளின் அதிகரிப்பு 4 மாத காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் மருத்துவர்களின் தினசரி கூடுதல் வேலை நேரத்தை 4 மணிமுதல் 8 மணி நேரமாகவும், மாதாந்த கூடுதல் வேலை நேரத்தை 120 முதல் 180 மணி நேரமாகவும் அதிகரிக்கவே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களில் 56 பேர் பலி
உர மூடைகளை அதிக விலையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - அடையாள அணிவகுப்பில் - 4 பொலிஸாரை அடையாளம் காட்டினார் பிரதான சாட்சி!
|
|