அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.
மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2 ஆயிரம் பக்கங்களை கொண்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 198 முறைப்பாடுகளின் விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்!
மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு - ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரை...
விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை ...
|
|