அரசியல் கூட்டங்களுக்கு மைதானங்கள் கிடையாது!

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள 23 பொது மைதானங்களில் புனர்நிர்மாணம் காரணமாக அரசியல் கூட்டங்களை நடத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
ஹைட்பாக் கோனர், மாளிகாவத்த சிறிசேன மைதானம், ரட்ணம் மைதானம், நவகம்புர மைதானம் உள்ளிட்ட மைதானங்களே புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இதில் ஹைட்பார் கோனர், கால்பந்தாட்ட தொகுதியாக மாற்றப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றபோதும் அரசியல் கூட்டங்களை நடத்த ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அது மக்கள் பாவனையில் இருந்து தவிர்க்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
யாழ். பல்கலைகழகத்திற்கு மூன்று அமைச்சர்கள் விஜயம்!
புறக்கோட்டையில் திடீர் தீப்பரவல்!
10 ஆம் திகதி பொலிஸ் தினம்!..
|
|