அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!
Thursday, April 1st, 2021
பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள், மத மற்றும் இன ரீதியாக பெயரிடப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சிகளின் யாப்புகளில் இவ்வாறான சரத்துக்கள் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பில் குறித்த குழு ஆராயவுள்ளது.
இந்த குழுவின் பணிகளை கண்காணிப்பதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர், அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுப்போக்குவரத்துகளில் மட்டுப்பாடு - அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புகையிரதங்களில் பயணிக்க அ...
மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கான இது பொருத்தமான தருணம்- இளைஞர்கள் ஆத...
நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...
|
|
|


