அம்பியூலன்ஸ் சேவைக்கு பதிலாக வானூர்தி சேவை – புதிய யோசனை!

Wednesday, July 6th, 2016

தற்போது நாட்டின் அரச வருவாயில் 96% செலவாக உள்ளதகவும், வெறும் 4% மட்டுமே சேமிப்பு வீதமாக உள்ளது, இதனாலேயே வரி அறவிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-

நாட்டில் சேமிப்பு வீதம் குறைவாக காணப்பட்டதால் பல வங்கிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த வரி அறவிடும் செயற்பாட்டை முன்னெடுத்திருப்பதாகவும் மேலும், அம்பியூலன்ஸ் சேவைகளுக்கு பதிலாக வானூர்தியை சேவையில் உட்படுத்துவதற்கு தாம் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவாக வைத்தியசாலைக்கு செல்லும் பணியில் அம்பியுலன்ஸ் சேவையை விட வானூர்தி மிக விரைவாக செல்லும் எனவும். மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை தாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: