அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்!
Wednesday, November 23rd, 2016
அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் ஆர்.பீ.ஆர் ராஜபக்ஷவை பணி நீக்கம் செய்ய காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
காணி ஆணையாளருக்கு எதிராக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் காணி ஆணையாளர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணி ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் வரையில் இடைக்கால அடிப்படையில் பணியை முன்னெடுக்க ஒருவரை நியமிக்க உள்ளதாக காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
மீண்டும் புகையிலையால் சர்ச்சை!
பத்தாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று – தீவிர நடவடிக்கையில் சுகாதார தரப்பினர்!
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு ஒதுக்குவதே எமது இலக்கு - அமைச்சர் ரமேஷ் ...
|
|
|


