அமைச்சரவையில் மாற்றம் ?

Tuesday, February 7th, 2017

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் நிதி அமைச்சை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரும்படி ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வாறு நிதி அமைச்சை பிரதமரின் கீழ் கொண்டுவந்து அமைச்சர் ஏரான் விக்ரமரத்தன போன்ற திறமையானவர்களை நிதி பிரதி அமைச்சராக நியமித்து நிதி அமைச்சை நிர்வகிக்குமாறும் மேலும் கோரப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்காவிற்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சையும் தற்போழுது பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக உள்ள சந்திம வீரக்கொடிக்கு காணி அமைச்சை வழங்குமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

cabinet656565

Related posts: