அமெரிக்காவில் கழிவு முகாமைத்துக்  கற்றல் நடவடிக்கை!

Thursday, April 19th, 2018

இலங்கையின் கழிவு முகாமைத்துவ அதிகாரிகள் அமெரிக்காவில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கற்றல்கள் கழிவுகளிலிருந்து சக்தியை உருவாக்குதல், மீள்சுழற்சி செய்தல், சேதனப் பசளை உருவாக்கல் மற்றும் இலத்திரனியல் கழிவுகளிலிருந்து கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதுஎன்பன தொடர்பான சிறந்த நடைமுறைகள் தொடர்பில் இடம்பெறுகின்றன.

இதனிடையே கலிபோர்னியா மற்றும் வொஷிங்டன் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் குறித்த குழுவினர் வேகாஸில் இடம்பெறும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான கண்காட்சியிலும்பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts: