அமரர் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, February 10th, 2017

முன்னாள் பனை தென்னை கூட்டுறவுச் சமாச தலைவர் அமரர் கிட்டினன் சிவப்பிரசாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள்  இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கூவில் பருத்தித்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்  ஆகியோர் அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்,  ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.

16649519_1215232608592941_6432059685400242787_n - Copy

16684223_1215232688592933_6128866351668141718_n - Copy

16649032_1215232648592937_1968144234753982528_n - Copy

16508946_1215232748592927_740416912544690331_n

Related posts: