இன்றுமுதல் அனைத்து வகையான சிகரட் வகையும் விலை உயர்வு !
Tuesday, November 1st, 2016
அனைத்து வகையான சிகரட் விலைகளும் குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் ரூபாய் 10 வரை இன்று(01) முதல் அதிகரிப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி அதிக நுர்வுடைய சிகரட் ஒன்றின் விலை 50 ரூபாய் என இலங்கை புகையிலை நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிகரட் உற்பத்தி வரி அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு இந்த விலை அதிகரிப்பின் மூலம் புகைபிடிப்பவர்களது எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது புகை பிடிப்பவர்களுக்கு அதன் மீது வெறுப்பு வர வேண்டும் என்பதற்காகவே அதன் விலையை அதிகரித்துள்ளோம் என ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
விவாதம் நடத்துவதில் சட்ட சிக்கல்கள் கிடையாது – தினேஸ்குணவர்த்தனா !
தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் - ஞானசார தேரர் தெரிவிப்பு!
வடக்கில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரிப்பு - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பண...
|
|
|


