அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் சோதனையிட விசேட வேலைத்திட்டம்!

Tuesday, December 6th, 2016

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்படும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக இதன்போது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே தெரிவித்துள்ளார். பண்டினை காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களின் கொள்வனவு அதிகரிப்பதால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

food-shop

Related posts: