அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீத சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீத சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச அச்சக கூட்டுத்தாபனம் நூற்றி இருபத்தைந்து கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாகவும், தேவையான அளவு புத்தக அச்சிடுவதற்கு கூட்டுத்தாபனம் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது தாள்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீன்பிடிக்க சில மணி நேரம் கூட அனுமதிக்கமாட்டோம்.! - அமைச்சர் மஹிந்த அமரவீர!
சீரற்ற காலநிலையால் 291 குடும்பங்கள் வெளியேற்றம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு ஜுலை 12 ஆம் திகதி!
|
|