அனுமதியின்றி மணல் ஏற்றிய இரண்டு பேருக்கு ரூ 164,000 தண்டம்!

Wednesday, January 18th, 2017

அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதியனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய இரு உழிவு இயந்திரச் சாரதிகளுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 1லட்சத்து 64ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் தனங்களப்புப் பகுதியில் மறைந்திருந்த வேளை இரு உழிவு இயந்திர்களில் மணல் ஏற்றிவந்த இருவர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.

இந்த இருவருக்கும் எதிராக நேற்று சாவகச்சேரி நீதிமனிறில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மட்டுவில் சாந்திபுரத்தைச் சேர்ந்த நபர் ஏற்கனவே இதே குற்றத்திற்காக நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவர் என நீதிவானின் கவனத்திற்கு பொலிஸார் கொண்டுவந்ததையடுத்து அனுமதிப்பதிதிரம் இன்றி மணல் ஏற்றய குற்றத்திற்காக 1லட்சம் ரூபாவும் சாரதியனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமைக்காக 3ஆயிரம் ரூபாவும் தண்டம் விதித்தார்.

 மட்டுவில் வடக்கைச் சேர்ந்த மற்ற உழவு இயந்திரச் சாரதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிவான் சாரதி குற்றத்தi உப்புக்கொண்டதையடுத்து மணல் ஏற்றியமைக்கு 60ஆயிரம் ரூபாவும் சாரதியனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமைக்காக 30ஆயிரம் ரூபாவும் தண்டம் விதித்தார். கடந்த வருடங்களில் அனுமதிப்பததிரமின்றி  மணல் ஏற்றும் வாகனச்சாரதிகளுக்கு 30ஆயிரம் ரூபா அதிகபட்சம் தண்டமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

p_court-720x480

Related posts: