அதிவேக நெடுஞ்சாலையால் வருமானம் அதிகரிப்பு!
Monday, December 12th, 2016
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிவேக வீதியிலான வாகனப் போக்குவரத்து நூற்றுக்கு 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக, அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தெற்கு அதிவேக வீதியின் அதிகபட்ச வருமானம் கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி 17.5 மில்லியன் ரூபாய் கடந்த சனிக்கிழமை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஒபநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - ஜனாதிபதி இடையே விசே சந்திப்பு !
எதிரணி மற்றும் மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்களது பிரசன்னம் கட்டாயம் - ஜனாதி...
இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றால் சில சட்டங்களை நாம் கொண்டுவர வேண்டும் - நாடாளுமன்ற உறுப்...
|
|
|


