அதிக விலைக்கு பாண் விற்றவக்கு தண்டம்!

பாணுக்கு நிர்ணயித்த விலையை விட 2ரூபா கூடுதலாக விற்பனை செய்த தென்மராட்சி வர்த்தகருக்கு 9ஆயிரம் ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி நீதிமன்று.
யாழ்.மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபையின் அலுவலர்கள் தென்மராட்சி பிரதேசத்தில் சோதனை நடத்தினர். ஒரு இறத்தால் பாணின் விலை ரூ58 ஆக நிர்ணயித்த போதிலும், 2 இறத்தால் பாணை 120ரூபாவுக்கு விற்பனை செய்த குறித்த வர்த்தகர், பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். குறித்த வர்த்தகருக்கு எதிராக அதிகாரசபை அலுவலரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்க எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான் வர்த்தகர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டம் விதித்தார்.
Related posts:
போலி ஏ.டி.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது!
உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு இலங்கைக்கு 112ஆம் இடம்!
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம...
|
|