அதிகாரிகள் பற்றாக்குறையால் திண்டாடும் சுகாதார அமைச்சு: ஜனாதிபதிக்கு முறைப்பாடு!

Tuesday, June 20th, 2017

சுகாதார அமைச்சில் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் அமைச்சின் வழமையான அலுவல்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுகாதார அமைச்சுச் செயலாளர் பதவி நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட உதய செனவிரத்னவுக்கு எதிப்புத் தெரிவிப்கப்பட்டதால் அவர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்காமல் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சிலேயே தனது பதவியை தொடர்கிறார் எனசவும் அத்துடன் சுகாதார சேவைகள் விநியோகப் பிரிவின் மேலதிக செயலாளரின் பதவியும் நோய்க்கட்டுப்பட்டுப் பிரிவின் மேலதிக செயலாளர் பதவியும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பதவியை பதில் பணிப்பாளர் நாயகமே வகித்து வருவமாகவும் பிரதி சுகாதார சேவைகள் நாயகங்கள் நால்வரின் பதவிகளும் வெற்றிடங்களாக இருந்து வருவதாகவும் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Related posts: