அடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்துகளில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு!

அடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து சிவில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கடந்த வருடத்தில் அடையாளம் காணப்படாத வாகனங்களால் 111 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துக்களால் 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 72 பேரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதோடு எஞ்சியோருக்கு நஷ்டஈடு வழங்க 40 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
M.P.க்களது ஓய்வூதியம் இரத்துசெய்யப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி!
தென்மராட்சியில் மூன்றாம் கட்ட உலர்உணவுப் பொருட்கள் !
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் ...
|
|