50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளைக் கட்டும்பணிகள் மார்கழி மாதம் முதல்வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 21st, 2018

ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு ஆசிர்வாதமும் பங்களிப்பும் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரமதர் மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சரவைக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியின் முதற்கட்டமாக 15 ஆயிரம் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு மார்கழி மாதம் முதல்வாரத்தில் நடைபெறவுள்ளது. என்று மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்திமற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தெரிவித்தார்.

50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் எனது முயற்சிக்கு தேசிய நல்லிணக்க அமைச்சர் வாசுதேசநாணயக்கார அவர்களும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் வழங்குவதையிட்டு அவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டங்களுக்கும் மேலதிகமாக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் மேலும் ஒருதிட்டத்தை இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் உரியவாறும் அக்கறையோடும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பலதரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது.

நான் முன்னர் ஆட்சியில் இருந்தபோது பலவீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். ஆதில் முக்கியமானதாக 2010ஆம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த தற்போதைய டிபிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியாவுக்கு அரசு உத்தியோகபூர்வமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது எமது மக்களுக்கு 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொண்டு வந்திருந்தேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts:

இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீ...
நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...
எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை அனைத்து வளங்களும் நிறை...

கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்வேன் - நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்...
சாத்தியமாக்கப்பட்டது புலிக்குளம் நீர்விநியோகத் திட்டம் - யாழ் பல்கலைக்கழக பேரவை அமைச்சர் டக்ளசுக்கு ...
மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ...